வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவாரூர்
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
Related Tags :
Next Story