வீரமாத்தியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


வீரமாத்தியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

வீரமாத்தியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

நொய்யல்,

கரூர் மாவட்டம் உப்புபாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களும் உள்ளன. இதையொட்டி வீரமாத்தி யம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story