விநாயகா் கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகா் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேலாயுதம்பாளையம்,
வளர்பிறை சதுர்த்தியையொட்டி வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர்,பன்னீர், சந்தனம், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.இதேபோல் காகிதபுரம் வல்லபை கணபதி, புகழிமலை விநாயகர், ஓம் சக்தி நகர் கற்பக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் வளர்பிறை சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நொய்யல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் கோவிலில் உள்ள விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் முத்தனூர், சேமங்கி, நொய்யல், குறுக்குச்சாலை, அண்ணாநகர், அத்திப்பாளையம், குப்பம், உப்புபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷகம் நடந்தது