கழுகாசலமூர்த்தி கோவிலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சரும், பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அவர் நலமுடன் வாழ வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், ஜெயலலிதா பேரவை மாவட்ட அவைத் தலைவர் மாரியப்பன், மாவட்ட வர்த்தக பிரிவு காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு மயிலோடை பஞ்சாயத்து தலையால்நடந்தான்குளம் கிராமத்தில் வின்ஸ்டார் நடத்தும் 10-ம் ஆண்டு தமிழர் திருநாள் கிரிக்கெட் போட்டியை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செ.செல்வகுமார், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, நகரச் செயலாளர் ராமசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆசூர் காளி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.