சென்னிமலை அருகே நொய்யல் நதி நீர் சிறக்க வேண்டி சிறப்பு வழிபாடு
சென்னிமலை அருகே நொய்யல் நதி நீர் சிறக்க வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
ஈரோடு
சென்னிமலை
ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் நொய்யல் ஆற்று தண்ணீரில் திருப்பூர் சாயக்கழிவுகள் கலந்து வந்ததால் விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது மழைக்காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னிமலையில் உள்ள நர்மதை மருந்தீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் சரவண சாமிகள் தலைமையில் நொய்யல் நதி நீர் சிறந்து விளங்க வேண்டி ஒரத்துப்பாளையம் அணையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story