அம்மன் ேகாவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் ேகாவில்களில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் ேகாவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு கரகம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த மேல கோதை நாச்சியார்புரம் முத்து மாரியம்மன் கோவில், வெம்பக்கோட்டை அருகே உள்ள இ. மீனாட்சிபுரம் அழகம்மாள் கோவில், சத்திரப்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பங்குனி பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story