ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவாரூர்
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக. சீதா, லெட்சுமணன், அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள 33 அடி உயர சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயருக்கும், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story