ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி
மார்கழி மாதத்தில் வரும் மூல நட்சத்திரத்துடன் கூடிய அமாவாசை தினத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று அனுமன் ஜெயந்தியை ெயாட்டி நாகை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர், சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், வெளிப்பாளையம் ராமர் மட தெருவில் உள்ள ஆஞ்சநேயர், மேலவாஞ்சூர் ஜெயவீர ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
தோப்புத்துறை
இதையடுத்து மலர்களால் அலங்கரித்து வடைமாலை மற்றும் வெண்ணெய் சாற்றி அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு வெண்ணைய் காப்பு, வடை மாலை, துளசி மாலை ஆகியவை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.