விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பில் இருந்து அழகாபுரி செல்லும் சாலையில் தாணிப்பாறை விலக்கில் அமைந்துள்ள ஆலமரத்து விநாயகர் கோவிலில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதேபோல விருதுநகர் அக்ரகார தெருவில் உள்ள அரசமரத்து விநாயகர், லட்சுமி நகர் ஊருணிக்கரை ஓம் கணபதி, வேலாயுத தேவர் பிள்ளையார், புல்லலக்கோட்டை பால விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிவகாசி
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள விநாயகர் கோவில், சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவில், ெரயில் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவில், செங்கமலநாச்சியார் புரத்தில் உள்ள விநாயகர், காளியம்மன் கோவிலில் உள்ள விநாயகர் மற்றும் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர்கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
ஆலங்குளம் அண்ணாநகர் விநாயகர் கோவில், கல்லமநாயக்கர்பட்டி, எஸ்.எம்.எஸ்.கல்லூரி விநாயகர் கோவில், இருளப்ப நகர் விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள படித்துறை விநாயகர் கோவில், அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் விநாயகர் கோவிலிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சர்வ மங்கள வரச்சித்தி விநாயகர் கோவில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள ஆதி விநாயகர் கோவில், காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி, ராஜபாளையம், தளவாய்புரம், சேத்தூர், தாயில்பட்டி, வெம்பக்ேகாட்டை ஆகிய பகுதிகளிலும் உள்ள கோவில்களிலும் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.