விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த வனமூர்த்திலிங்கபுரத்தில் வெற்றி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சந்தனம், திருநீறு, பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த சக்திவேல் நகரில் சேனாதிபதி கணேசா, சக்தி நகரில் யோகா விநாயகர் கோவில், விஜய கரிசல்குளம் கரையடி விநாயகர் கோவில், சித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story