விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் பழைய பஸ் நிலையம் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் தெருவில் உள்ள கச்சேரி விநாயகர் கோவிலில் மகா சங்கடகர சதுர்த்தி விழா நடந்தது. இதனை முன்னிட்டு மூலவர் சிலைக்கு சிறப்பு அபிசேகமும், மகா ஆரத்தியும் நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் சஞ்சீவி, பிரசாத் நடத்தினர். இதில் காய்கறி வியாபாரிகள், பழைய பஸ் நிலைய வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஓம் சிங்கவிநாயகர் -பரமேஸ்வரன் கோவிலில் உச்சி காலத்தில் சுவாமிக்கு அபிேஷகங்கள், மகாதீபாராதனை கோவில் நிர்வாக அறங்காவலர் சதாசிவம் தலைமையில் நடந்தது. பூஜைகளை லட்சுமணன், உதயகுமார் நடத்தினர். இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் செந்தில்குமார், தொழில் கூட்டமைப்பின் (கிளஸ்டர்) நிர்வாகிகள், சிட்கோ உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், குறு தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story