அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர்:-
ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், உச்சுவாடியில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் பொடி, வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
திருமக்கோட்டை
இதேபோல் திருமக்கோட்டையில் மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் கஞ்சிவார்த்தல், மாவிளக்கு போடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொன்னியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில், ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ள பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இரவு மகா மாரியம்மன், பொன்னியம்மன் கோவில்களில் அம்மன் வீதி உலா நடந்தது. விழாஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.