அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு இளநீர், பன்னீர், பால், திருநீறு உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல சீர்காட்சி பத்திரகாளியம்மன் கோவில், கீழச்செல்லையாபுரத்தில் உள்ள செல்லியம்மன் கோவில், சுந்தாளம்மன் கோவில், மார்க்கநாதபுரத்தில் முப்புடாதி அம்மன் கோவில், வெம்பக்கோட்டையில் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில், செவல்பட்டியில் காளியம்மன் கோவில், வெற்றிலையூரணியில் காளியம்மன் கோவில், சத்திரப்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
Related Tags :
Next Story