அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

ஆடி வெள்ளிக்கிழமை

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினால் திருமண தடை நீங்கும், குழந்தை இல்லாதோருக்கு மகப்பேறு கிட்டும், வாழ்க்கையில் சகல துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சி பொங்கும் என்பது ஜதீகமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தீபம் ஏற்றி வழிபாடு

தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலின் முன்பு தீபமேற்றியும், சூடமேற்றியும், உப்பு வைத்து பயபக்தியுடன் வழிபாடு நடத்தினர். பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் பக்தர்கள் சார்பில் கூழ், பொங்கல், சுண்டல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

தரிசனம்

இதேபோல் கரூர் பசுபதிபுரம் வேம்பு மாரியம்மன் ,தாந்தோணிமலை முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோவில், தோகைமலை வெள்ளைபட்டி மகா மாரியம்மன், நொய்யல் திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்மன், சேமங்கி மாரியம்மன், நொய்யல் ெசல்லாண்டியம்மன் , வேலாயுதம்பாளையம் மலைவீதி மகா மாரியம்மன்வெள்ளியனை புவனேஸ் வரி அம்மன் உள்பட கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story