அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை கோவிலில் ஆடி மாத பவுர்ணமி மற்றும் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நஞ்சை புகழூர், கரியாம்பட்டி, புன்னம், குந்தாணி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.வேலாயுதம்பாளையம் அருகே தளவாப்பாளைத்தில் மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நாணப்பரப்பு, வேலாயுதம்பாளையம், கடம்பங்குறிச்சி பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story