அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் திருக்காடுதுறை, நன்செய் புகழூர், தவிட்டுப்பாளையம், சேமங்கி, நொய்யல், அத்திப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தளவாப்பாைளயத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி நேற்று அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதேபோல நாணப்பரப்பு, வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.