முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

வேலாயுதம்பாளையம் அருகே புகழிமலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.

வெள்ளியணை அருகே காணியாளம்பட்டி காணிகளத்தூர் முருகன் கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு இளநீா், பன்னீா், பால், தயிா், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பல்வேறு மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் நேற்று கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story