முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கார்த்திகை தீபதிருநாளையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
கார்த்திகை தீபதிருநாளையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபதிருநாள்
கார்த்திகை தீப திருநாளையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதை முன்னிட்டு ஆறுமுக கடவுளுக்கும், மேலக்குமரருக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி கோவில் பிரகார புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
இதுபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர்கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணிய சுவாமி, தோப்புத்துறை கைலாசநாதர் கோவிலில் உள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.