முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 26 Feb 2023 6:45 PM GMT (Updated: 26 Feb 2023 6:46 PM GMT)

மாசிமாத கார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

மாசிமாத கார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் மாசிமாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

முன்னதாக சாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விபூதி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிக்கல் சிங்காரவேலவர் கோவில்

இதேபோல் தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் உள்ள முருகன், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகன், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிங்காரவேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story