சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

தவிட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் ேவலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில்உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் நந்திபகவானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதேபோல் தோகைமலை அருகே கழுகூர் கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், லாலாபேட்டை அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story