சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சனிப்பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்

திருமக்கோட்டை:

சனிப்பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

ஐப்பசி மாத சனிப்பிரதோஷத்தையொட்டி திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக நந்திக்கும், ஞானபுரீஸ்வரருக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், பூவனூர் கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

குடவாசல்

குடவாசல் கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் கோவில், கோணேஸ்வரர் கோவில், சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில், திருவீழிமிழலை வீழிநாதர் கோவில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், சற்குனேஸ்வரபுரம் சற்குணேஸ்வரர் கோவில், திருக்களம்பூர் வில்வவனேஸ்வரர் கோவில், வடபாதி கைலாசநாதர் கோவில், பாமணி நாகநாதர் கோவில், பரவாக்கோட்டை நாகநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மன்னார்குடி

மன்னார்குடி அண்ணாமலை நாதர் கோவில், காமாட்சியம்மன் கோவில், .நீலகண்டேசுவரர் கோவில், கைலாசநாதர் கோவில், மீனாட்சியம்மன் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், ஜெயங்கொண்ட நாதர் கோவில், பாமணி நாகநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.


Next Story