கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அரியலூர்

அரியலூர் நகரில் உள்ள சிவன் கோவில், அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மேலத்தெருவில் உள்ள படை பத்து மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். ஒப்பில்லாத அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வஞ்சத்தான் ஓடையில் இருந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு கோவிலில் கும்மியடித்து தாலாட்டு நடைபெற்றது. மேலும் பக்தர்கள் குடும்பத்துடன் நிலாச்சோறு சாப்பிட்டனர். மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று கிரிவலம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று மாலை கணக்க விநாயகர் கோவிலில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சித்ரா பவுர்ணமி கிரிவலம் கோவிலில் தொடங்கி வன்னியர்குழி, கணக்க வினாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள், சிவனடியார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story