கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவில்களிலும் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பன்னீர், இளநீர், பால், திருநீறு உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல வெற்றிலையூரணி காளியம்மன் கோவில், வனமூர்த்தி லிங்கபுரம் காளியம்மன் கோவில், மடத்துப்பட்டி மாரியம்மன் கோவில், வெம்பக்கோட்டை அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story