சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருச்சி

சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சமயபுரம்

சித்திரை மாத பவுர்ணமியையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்கள் முடிகாணிக்கை செய்தும், அக்னிச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்து வழிபாடு நடத்தினர். மேலும் பக்தர்கள் கோவில் முன்பு விளக்கேற்றியும் வழிபட்டனர். மேலும் பவுர்ணமியையொட்டி 108 விளக்கு பூைஜ நடந்தது.

உக்கிரமாகாளியம்மன் கோவில்

இதுபோல் திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால்குடம், தீர்த்தக்குடம், அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காவிரி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். மாலை 5 மணிக்கு அம்மனுக்கு ராஜமகா அபிஷேகம் நடைபெற்றது. இரவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

திருவெள்ளறை

திருவெள்ளறையில் உள்ள கோடை பிள்ளை அய்யனார் பிச்சனார் சமேத பாப்பாத்தி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது.தொடர்ந்து பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரமும், பின்னர் தீபாராதனையும் நடைபெற்றது.இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதசாமி கோவிலில் பூமிநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.அதை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

முசிறி

முசிறி கள்ளத்தெரு மகா மாரியம்மன், மேலத்தெரு மகா மாரியம்மன், சின்ன சமயபுரத்தால் பாலத்து மகா மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.


Next Story