பவுர்ணமி சிறப்பு வழிபாடு


பவுர்ணமி சிறப்பு வழிபாடு
x

புளியரை மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள புளியறை வழிகாட்டும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கருப்பசாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து அருள்வாக்கு சித்தர் அய்யப்பன்சாமி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளையின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. இதில், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, அருள்வாக்கு பெற்று சென்றனா்.


Next Story