உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தில் சிலுவைபாதை சிறப்பு வழிபாடு


உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தில் சிலுவைபாதை சிறப்பு வழிபாடு
x

உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தில் சிலுவைபாதை சிறப்பு வழிபாடு நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தில் சிலுவைபாதை சிறப்பு வழிபாடு நடந்தது.

கிறிஸ்துவர்களின் தவக்காலத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான புனித வெள்ளி எனப்படும் பெரியவெள்ளி நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி உதயேந்திரம் தூய நெஞ்ச ஆண்டவர் ஆலயத்தில் இயேசுவின் சிலுவைபாடுகளை நினைவு கூறும் சிலுவை பாதை எனப்படும் சிறப்பு சிலுவைபாதை வழிபாடு ஆலய பங்குதந்தை மாறன் தலைமையில் நடைபெற்றது.

இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இயேசுவின் சிலுவை பாதையின் பாடுகளை நினைவு கூர்ந்து செபித்தனர்.

இதன் பின்னர் பிற்பகலில் ஆலயத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு பின்பு உயிர் துறக்கும் நிகழ்ச்சியை நினைவு கூரும் சிறப்பு சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதே போல் வாணியம்பாடி கோணாமேடு சகாயமாதா ஆலயம், காமராஜபுரம், கொடையாஞ்சி உள்ளிட்ட கத்தோலிக்க, கிறிஸ்துவ ஆலயங்களிலும் புனிதவெள்ளி சிறப்பு சிலுவைபாதை வழிபாடு நடைபெற்றது.


Next Story