தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி வாள்நெடுங்கண்ணி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை யொட்டி தான்தோன்றீஸ்வரர், வாள் நெடுங்கண்ணி அம்மன், சிறப்புலி நாயனார் உள்ளிட்ட சாமிகளுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story