பைரவருக்கு சிறப்பு வழிபாடு


பைரவருக்கு சிறப்பு வழிபாடு
x

சாயாவனேஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது

மயிலாடுதுறை

பூம்புகார் சாயாவனம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சாயாவனேஸ்வரர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பைரவருக்கு மங்கள பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story