தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடு


தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேய்பிறை அஷ்டமி

நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திரளான பக்தர்கள் தரிசனம்

இதேபோல நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் அஷ்ட பைரவர், வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் உள்ள பைரவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவில்

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம்

வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூரில் மேலமறைகாடர் கோவில் உள்ளது.

இங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story