மகா பிரதோஷத்தையொட்டி மாரியம்மன் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்


மகா பிரதோஷத்தையொட்டி மாரியம்மன் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மகா பிரதோஷத்தையொட்டி மாரியம்மன் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்

நீலகிரி

கோத்தகிரி

ஐப்பசி மாத மகா பிரதோஷ நாளான நேற்று முன்தினம் கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில் காலை10 மணிக்கு யாக பூஜை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அருகம்புல் சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரைத் தரிசனம் செய்தனர்.


Next Story