நாகாபரண விநாயகருக்கு சிறப்பு வழிபாடு


நாகாபரண விநாயகருக்கு  சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகாபரண விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், வல்லப கணபதி கோவில், மாவடி பிள்ளையார் கோவில், நீலா மேல வீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர் கோவில், நாகூர் விருச்சிக விநாயகர் கோவில், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் கோவில், சொக்கநாதர் கோவில் தெருவில் உள்ள வீர சொக்கநாத விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story