வில்லேந்திய வேலவருக்கு சிறப்பு வழிபாடு
பூம்புகார் சாயாவனேஸ்வரர் கோவிலில் உள்ள வில்லேந்திய வேலவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள சாயாவனத்தில் சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவிலில் வில்லேந்திய வேலவர், தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நேற்று கந்த சஷ்டி விழாவையொட்டி வில்லேந்திய வேலவருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story