வில்லேந்திய வேலவருக்கு சிறப்பு வழிபாடு
தைப்பூசத்தையொட்டி வில்லேந்திய வேலவருக்கு சிறப்பு வழிபாடு பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்
மயிலாடுதுறை
திருவெண்காடு:
பூம்புகார் சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலில் நேற்று தைப்பூசத்தையொட்டி வில்லேந்திய வேலவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் ஐராவத குளத்திலிருந்து அலகு காவடி, பால்குடம் உள்ளிட்டவைகளை மேளம் தாளம் முழங்கிட ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து வில்லேந்தி வேலவருக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சண்முகா அர்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் துரை சிவாச்சாரியார் மற்றும் விழா குழுவினர், கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story