வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம்


வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம்
x
தினத்தந்தி 2 Aug 2023 1:00 AM IST (Updated: 2 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே கம்பிளியம்பட்டியில் வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த கம்பிளியம்பட்டியில் வரசித்தி வாராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது. அப்போது அம்மன், அஸ்வாரூடா வாராகி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், திண்டுக்கல், சாணார்பட்டி, வடமதுரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, தேனி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். முடிவில் வாராகி அறக்கட்டளை சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story