என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 3 இடங்களில் சிறப்பு மையம்


என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 3 இடங்களில் சிறப்பு மையம்
x

சேலம் மாவட்டத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 3 இடங்களில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

சேலம்

கருப்பூர்:

சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் மலையாளம் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் உயர்கல்வித்துறை, தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் இணைய வழி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய தமிழகம் முழுவதும் 110 இடங்களில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி நூலக கட்டிட வளாகத்தில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையம் இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்படும். இந்த மையத்தை மாணவர்கள் பயன்படுத்தி என்ஜினீயரிங் படிப்புக்கு தங்களது விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு https://www.tneaonline.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் வனவாசி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்ற சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story