'தமிழ்நாடு நாள்' விழா கட்டுரை, பேச்சு போட்டிகள் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்


தமிழ்நாடு நாள் விழா கட்டுரை, பேச்சு போட்டிகள்   பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்
x

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி திருவாரூர் மாவட்ட அளவில் நடைபெற உள்ள கட்டுரை, பேச்சு போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.

திருவாரூர்

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி திருவாரூர் மாவட்ட அளவில் நடைபெற உள்ள கட்டுரை, பேச்சு போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்டுரை, பேச்சு போட்டிகள்

தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார். இவ்விழாவினை கொண்டாடும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.

மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இடம்- நாள்

போட்டிகள் நடைபெறும் இடம், நாள், நேரம், போட்டிக்கான தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலமாக தெரிவிக்கப்படும்.

கொரோனா நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியுடனும் போட்டிகள் நடத்தப்படும். இதில் பங்கேற்று மாணவர்கள் பயன் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story