ஊட்டி அரசு கலை கல்லூரியில் பேச்சு போட்டி - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


ஊட்டி அரசு கலை கல்லூரியில் பேச்சு போட்டி -  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x

ஊட்டி அரசு கலை கல்லூரியில் பேச்சு போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

நீலகிரி

ஊட்டி

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி ஊட்டி அரசு கலைக் கல்லூரி தமிழ் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முதல் மற்றும் மூன்றாம் இடங்களை ஊட்டி அரசு கல்லூரி மாணவர்களும், இரண்டாம் இடத்தை குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவிகளும் பிடித்தனர். அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கு நடுவர்களாக ஆங்கில துறையை சேர்ந்த பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், காயத்ரி ஆகியோர் செயல்பட்டனர். ஒருங்கிணைப்பாளராக தமிழ்த்துறைப் பேராசிரியர் பரமேஸ்வரி செயல்பட்டார். இதேபோல் கல்லூரி வளாகம் முழுவதும் மாணவ-மாணவிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story