சாத்தான்குளத்தில்கல்லூரி மாணவிகளுக்கு பேச்சு போட்டி
சாத்தான்குளத்தில்கல்லூரி மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ராமகோபாலகிருஷ்ணர் அரசு பொது நூலகம் மற்றும் அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை தாங்கினார்.
"சமூக நீதியும் சவால்களும்" எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டிக்கு சாத்தான்குளம் பி.எஸ்.பி. ராஜரத்தினம் கல்வியியல் கல்லூரி பேராசிரியை சுகந்தி வரவேற்று பேசினார்.
வாசகர் வட்டத் தலைவர் நடராசன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார், யோகா ஆசிரியை ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தான்குளம் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பவுலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியை சண்முகசுந்தரி நன்றி கூறினார். பேச்சுப்போட்டியில் கல்வியியல் கல்லூரி மாணவியர் செல்வி ஜேஸ்மின் முதலிடம் பெற்றார். ஷர்லின் பிரியா 2-வது பரிசையும், ஞான அந்தோணி ஜெனிபர் 3-வது பரிசையும் பெற்றனர்.