மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான வருகிற 14-ந் தேதி அன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின விழா, ரோஜாவின் ராஜா, ஜவஹர்லால் நேருவின் தியாகங்கள், நூல்களை போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்கள் இந்திய விடுதலை போரில் நேருவின் பங்களிப்பு, நேரு கட்டமைத்த இந்தியா, காந்தியும் நேருவும், நேருவின் பஞ்சசீலக்கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, அமைதிப்புறா-நேரு ஆகிய தலைப்புகளில் பேசலாம்.
பெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.