மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி


மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
x

ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது.

ராமநாதபுரம்

சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தியாவின் வளர்ச்சியில் மீன் வளத்தின் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் 30 மாணவ-மாணவிகள் மற்றும் 5 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை யுனைசி பரிசு வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை திட்ட இணை அலுவலர் ஜெயபவித்ரன், களப்பணியாளர் தேவநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story