பள்ளியில் பேச்சுப்போட்டி


பள்ளியில் பேச்சுப்போட்டி
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் பள்ளியில் பேச்சுப்போட்டி நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டியும், காந்தி பிறந்தநாளையொட்டியும், நடத்திய பேச்சு போட்டியில் மணப்பாடு புனித வளனார் மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவர்கள் டிவைன்சன் எபி, தர்சினி ஆகியோர் முதல் பரிசுகளை பெற்றனர். அவர்களுக்கான பரிசுத்தொகை தலா ரூ.5000 மற்றும் முதன்மை பெற்றதற்கான சான்றிதழை தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினரும், மதுரை உலக தமிழ் சங்கத்தின் முன்னாள் இயக்குனருமான பேராசிரியர் பசும்பொன், கோவில்பட்டி தமிழ் பேராசிரியை சந்தன மாரியம்மாள், மதுரை பல்கலைக்கழக பேராசிரியை ரேணுகா, மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story