திருச்செந்தூர்ஆதித்தனார் கல்லூரியில் பேச்சு போட்டி
திருச்செந்தூர்ஆதித்தனார் கல்லூரியில் பேச்சு போட்டி நடந்தது.
திருச்செந்தூர்:
மும்பை சுயசார்பற்ற நிறுவனங்களின் அமைப்பாளர் ஷெரப் 56-வது நினைவுநாளையொட்டி அகில இ்ந்திய அளவில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் பேச்சு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் சி.ரமேஷ் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பொருளியல் துறையின் உதவி பேராசிரியை முருகேஸ்வரி நன்றி கூறினார். போட்டியில் நடுவர்களாக பொருளியல் துறை இணை பேராசிரியர் மாலைசூடும் பெருமாள், உதவி பேராசிரியர் கணேசன் மற்றும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ராஜ் பினோ ஆகியோர் செயல்பட்டனர்.
பேச்சு போட்டியில் முதுகலை 2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி லிபியா நாராயணி முதல் பரிசாக ரூ.2500-ம், இளங்கலை பொருளியல் 3-ம் ஆண்டு மாணவர் செல்வம் 2-ம் பரிசாக ரூ.1,500-ம், இளங்கலை 3-ம் ஆண்டு வணிக நிர்வாகவியல் மாணவர் முகமது செய்க் மபாஷ் 3-பரிசாக ரூ.1000-ம் பெற்றுக் கொண்டனர். மாணவி ஆஷா மற்றும் மாணவர் கார்த்திக் ராஜ் ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை பொருளியல் துறையின் உதவி பேராசிரியர் வீ.சிவ இளங்கோ தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவ செயலர்கள் ஜெப்ரின் ஆகாஷ் மற்றும் முகுந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.