விபத்துக்களை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும்
விபத்துக்களை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும்
போடிப்பட்டி
உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு பகுதிகளில் பிரபலமான தனியார் பள்ளிகள் உள்ளது.மேலும் இந்த பகுதியைச் சுற்றி ஏராளமான டியூசன் சென்டர்களும் அமைந்துள்ளன. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாகனங்கள் இந்த பகுதியைச் சுற்றி அதிக அளவில் கடந்து செல்கின்றன.அத்துடன் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாடகை வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால் பெரும்பாலும் அதிவேகமாக இயக்கப்படுகின்றன.இதனால் பல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இதனைத் தவிர்க்கும் விதமாக ஆங்காங்கே உள்ள சாலை சந்திப்புகளில் வேகத்தடை இல்லாத பகுதிகளில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக இந்தப் பகுதியை ஒட்டி உள்ள ஆறுமுகம் லே-அவுட் பகுதியில் வேகத்தடை அமைப்பதுடன் அது குறித்த எச்சரிக்கை பலகையும் வைக்க வேண்டியது அவசியமாகும்.