கூத்தாநல்லூர் பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது


கூத்தாநல்லூர் பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது
x
தினத்தந்தி 13 Jan 2023 12:45 AM IST (Updated: 13 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிெராலியாக கூத்தாநல்லூர் பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

'தினத்தந்தி' செய்தி எதிெராலியாக கூத்தாநல்லூர் பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.

பிரிவு சாலை

கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திாி அருகில் உள்ள அப்துல்ரகுமான் சாலையில் ஆஸ்பத்திரி சாலை, சின்னகூத்தாநல்லூர் சாலை, கூத்தாநல்லூர் சாலை, லெட்சுமாங்குடி கடைவீதி சாலை என 4 பிரிவு சாலை உள்ளது. இந்த 4 பிரிவு சாலையிலும் வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், கோரையாறு, ஓவர்ச்சேரி, பாண்டுக்குடி, திருராமேஸ்வரம் மற்றும் அதை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள், மற்றும் திருவாரூர், மன்னார்குடி, கொரடாச்சேரி, கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன.

வேகத்தடை அமைக்கப்பட்டது

இந்த நிலையில் ஆஸ்பத்திரி சாலை, சின்னகூத்தாநல்லூர் சாலை, லெட்சுமாங்குடி கடைவீதி சாலை, கூத்தாநல்லூர் சாலை என 4 பிரிவு சாலையில் ஒரே நேரத்தில் எதிர் எதிரே வரும் வாகனங்கள், அடிக்கடி விபத்தில் சிக்கின. எனவே 4 பிரிவு உள்ள சாலை முகப்பில் 2 பக்கமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட இடத்தில் வேகத்தடை அமைத்துள்ளனர். வேகத்தடை அமைத்த அதிகாரிகளுக்கும் இது குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story