விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்

விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்
x

சாலியமங்கலம் அருகே நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்;

சாலியமங்கலம் அருகே நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்துகள்

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம், அருகே தஞ்சை- நாகை, தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் பிரிவு சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அதிவேகமாக வரும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுகிறது. சாலியமங்களம் பிரிவு சாலை பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் வெளிச்சமின்றி காணப்படுகிறது.

வேகத்தடை

இதனால் பாபநாசத்தில் இருந்து சாலியமங்களம் நகர்பகுதிக்கு செல்ல நெடுஞ்சாலையை கடக்க நினைக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுத்து சாலியமங்கலம் புறநகர் தேசியநெடுஞ்சாலை பிரிவு பகுதியில் தொடரும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story