வாகன விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்கப்படுமா?


வாகன விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்கப்படுமா?
x

திருவாரூர் கல்பாலத்தில் வாகன விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் கல்பாலத்தில் வாகன விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிக்னல் கம்பங்கள்

திருவாரூர் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய சந்திப்பு சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும், போக்குவரத்தை சீரமைக்கவும் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டது.தொடக்கத்தில் சிக்னல் விளக்குகள் எரிந்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்து வந்தனர். கால போக்கில் இந்த சிக்னல் கம்பங்கள் போதிய பராமரிப்பு இன்றி காணமல் போனது.

வேகத்தடை

தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே சிக்னல் கம்பங்கள் உள்ளன. இந்த கம்பங்கள் பயனற்ற நிலையில் காட்சி பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக தஞ்சை சாலை கல்பாலம் பகுதியில் நாகை, தஞ்சை, மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய பகுதிக்கு செல்லும் பிரிவு சாலைகள் உள்ளது. இங்கு அதிகமாக வாகன போக்குவரத்து நெருக்கடி உள்ள நிலையில் வேகத்தடை இல்லாமல் உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்தை தடுக்கும் வகையில் திருவாரூா் கல்பாலத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் இந்த இடத்தில் உள்ள சிக்கனல் விளக்கை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story