ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணியை விரைவுப்படுத்த வேண்டும்


ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணியை விரைவுப்படுத்த வேண்டும்
x

ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணியை விரைவுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ஆற்காடு அண்ணாசிலையில் இருந்து உழவர் சந்தை வரை நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்த பள்ளம் தோண்டினார்கள். அதில் ஒரு பக்கம் சாலை பணி முடிந்து விட்டது. மற்றொரு பக்கத்தில் தோண்டிய பள்ளத்தில் ஜல்லிக்கற்கள் போட்டுள்ளனர். அந்தப் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story