குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை


குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுறுத்தினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

குமரி மாவட்ட குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் அனைத்து குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு விரைந்து தண்டனை கிடைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை விசாரணை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் வாக்குமூலங்களை வீடியோ பதிவு செய்ய வேண்டும். கோர்ட்டுகளில் கேட்கப்படும் ஆவணங்கள், சாட்சியங்கள் முறையாக தாக்கல் செய்ய வேண்டும். நீண்ட காலமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ள வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். விபத்து அதிகம் ஏற்படும் இடங்களில் விழிப்புணர்வு பேனர்களை வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பாராட்டு சான்றிதழ்

கூட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறந்த முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார். இதுேபால் திருட்டுப் பொருட்களை மீட்பதில் சிறந்த முறையில் செயல்பட்ட போலீசார், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் சிறந்த முறையில் செயல்பட்ட அரசு வக்கீல்கள் ஆகியோருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் கன்னியாகுமரி போலீஸ் துணை சரகத்தில் பணியாற்றி திருநெல்வேலி மாவட்டத்துக்கு இடமாறுதலில் செல்லும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாவுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பொருள்களை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார்.

இதுபோல் திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு உதவிய சென்னிதோட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீகுமாருக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள், அரசு குற்றவியல் வக்கீல்கள், குழந்தைகள் நல அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர், மின்சார துறை பொறியாளர், வனத்துறை அதிகாரிகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story