முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர்

வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, வேலூர் தெற்கு ரோட்டரி சங்கம், கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்டம், தண்டுவடம் காயம் அடைந்தோர் அமைப்பு ஆகியவை சார்பில் முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியில் நடத்தப்பட்டது.

வேலூர் தெற்கு ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் என்.ரமேஷ், துணைத் தலைவர் என்.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வேலூர் ஜனனி பிக்பஜார் பி.சதீஷ்குமார், வக்கீல் வி.எல்.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் எம்.ஞானசேகரன் வரவேற்றார்.

இதில் சி.எம்.சி. கல்லூரியின் மறுவாழ்வு நிலைய பணியாளர்கள் ஓ.ஜேக்கப், எஸ்.ஜே.மகேஷ், விபத்தினால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தண்டுவடம் காயம் அடைந்தோர் அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், முதுகு தண்டுவட பாதிப்பினால் ஏற்பட்ட இன்னல்கள், சமூக பொருளாதார இழப்புகள் மற்றும் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஏ.குமரேசன் செய்திருந்தார்.

2 காலம்.


Next Story