மினி மாரத்தான் போட்டி


மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 10 Jun 2022 5:59 PM GMT (Updated: 2022-06-10T23:35:50+05:30)

சிங்கம்புணரி அருகே மாம்பட்டி ஊராட்சி ஒப்பிலான் பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே மாம்பட்டி ஊராட்சி ஒப்பிலான் பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவில் திருவிழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.மாம்பட்டி ஸ்ரீ பிரியா விடை நாயனார் பொண்ணா விடை செல்வி கோவில் திருவிழா நடந்து வருகிறது. 10-ம் திருநாள் தீர்த்தவாரி மண்டகப்படி திருவிழாவை முன்னிட்டு மயில்ராயன் கோட்டை நாடு எஸ்.மாம்பட்டி கிராமம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் முதலாம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதில் 153 பேர் பங்கேற்றனர். முன்னதாக 5 வயது முதல் 10வயது வரை சிறுவர்களுக்கு போட்டி நடைபெற்றது. தொடர்ந்து 10 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது.

அதை தொடர்ந்து 15 வயதுக்கு மேல் 30 வயது வரை உள்ள அனைவருக்கும் மாரத்தான் போட்டி நடைபெற்றது இதில் 153 பேர் கலந்து கொண்டனர். ஒப்பிலான்பட்டியில் இருந்து தும்பைபட்டி வழியாக ஏரியூர் மந்தை வரை சென்று திரும்ப 8 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

பரிசு

உடல் ஆரோக்கியம் மற்றும் பொதுமக்கள் ஒற்றுமை மையப்படுத்தி நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் முதல் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் வேல்முருகன், 2-வது பரிசை கர்நாடக மாநிலம் பெங்களூரு நஞ்சப்பா, 3-வது பரிசை தூத்துக்குடி அஜித் குமார், 4-வது பரிசை திருச்சி பிரகாஷ், 5-வது பரிசை திருச்சி லட்சுமணன், 6-வது பரிசை மதுரை வினோத், 7-வது பரிசை தூத்துக்குடி பார்வதிநாதன், 8-வது பரிசை ராமநாதபுரம் சமீம் அகமது, 9-வது பரிசை மதுரை கோகுல், 10-வது பரிசை திருவண்ணாமலை சக்திவேல் உள்பட 15 பேர் பெற்றனர். அவர்களுக்கு பரிசு தொகை மற்றும் பரிசு கேடயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எஸ். மாம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


Next Story